Subscribe Us

header ads

வனபரிபாலன திணைக்களத்தில் இலங்கை தொழினுட்ப சேவையின் பயிற்சி தரத்தைச்சேர்ந்த வட்டார வன உத்தியோகத்தர் பதவி

வனபரிபாலன திணைக்களத்தில் இலங்கை தொழினுட்ப சேவையின் பயிற்சி தரத்தைச்சேர்ந்த வட்டார வன உத்தியோகத்தர் பதவிகளுக்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

18 - 30 வயதிற்கு உட்பட்ட க.பொ.த உயர்தரப்பரீட்சையில் உயிரியல் அல்லது விவசாயம் உள்ளிட்ட 3 பாடங்களில் சித்தியடைந்தோர் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துமூலப்பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளதுடன், உளச்சார்பு தொழினுட்ப வினாத்தாள் ஆகிய இரு பாடங்களில் 40 வீதத்திற்கு கூடுதலான புள்ளிகள் பெறுவது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 06.10.2017ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், பரீட்சைக்கட்டணம் ரூபா 600.00 எனவும் அமைச்சின் காடு பேணுநர் தலைமை அதிபதி எஸ்.எ.அநுரசதுரசிங்க அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments