Subscribe Us

header ads

அனைவரும் இணைந்து நாட்டையும் இனத்தையும் பாதுகாக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ச


அனைவரும் இணைந்து நாட்டையும் இனத்தையும் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேராதனை இலுக்வத்த ஸ்ரீ புத்தகாயா மஹாவிஹாராதிபதி மல்வத்து பீட சிரேஸ்ட பதிவாளர் வெல்கம்பாயே விமலபுத்தி தேரரின் 76ம் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் இராணுவத் தளபதிக்கு குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போது என்னுடன் இணைந்து அவர்கள் போதி பூஜைகளை நடத்தினார்கள்.

தற்போது பௌத்த பிக்குகள் மிகவும் இழிவாக நடத்தப்படுகின்றனர்.பௌத்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர் இவ்வாறு பிக்குகளை இழிவாக பேசுகின்றார்.

இவருக்காகவா நாம் போதி பூஜை நடத்தினோம், இவருக்காகவா நாம் குரல் கொடுத்தோம் என பௌத்த பிக்குகளுக்கு தற்போது எண்ணம் உருவாகக் கூடும்.

நாட்டையும் இனத்தையும் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments