"வீதியால் பாடசாலை செல்லும் மாணவர்களாலும் எங்களாலும் அசுத்தமான குப்பை கூழங்களின் துர்நாற்றத்தின் காரணமாக பயணிக்க முடியவில்லை சென்று கொஞ்சம் பாருங்கள்" என்று அவ்வீதியால் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.
கல்பிட்டி நகரிலிருந்து சுமார் 50 மீட்டருக்கும் குறைவான தொலைவில் இருக்கும் உள்ளாச பயணிகள் பார்வையிட வரும் தொல்பொருள் கட்டிடமான ஒல்லாந்தர் கோயிலுக்கு பின்புறமாக அமைந்திருக்கும் அவ்வீதிக்கு சென்று பார்வையிட்ட எனக்கு புகைப்படம் எடுக்க முடியாத அளவுக்கு தூர்நாற்றம் வீசியது. அதேபோல் கழிவுப்பொருட்கள் வீதிகளிலும் வீசப்பட்டு இருப்பதையும் கட்டாக்காலி விலங்குகள் நடுவீதிக்கு இழுத்திருப்பதையும் என்னால் அவதானிக்க முடிந்தது.
இவ்வீதியில் வழமையாக கூழங்கள் போடப்படுவதால் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்ற அறிவித்தல் பலகையும் அங்கு காணமுடிந்தது சுகாதார காரியாலய அதிகாரிகளால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்து இருந்த போதும் இது தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இங்கு தூரப்பிரதேசத்தில் உள்ளவர்களும் ஹோட்டல் உரிமையாளர்களும் இரவில் கொண்டு போடுவதாக அருகில் உள்ளோர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு இருந்த போதும் இவ்வாறான செயல்பாடுகளால் அன்மையிலுள்ளவர்கள் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு வீதியில் பயணிக்கும் பாதசாரிகளுக்கும் மாணவர்களுக்கும் எமது ஊருக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையினரும் முகம் சுலிக்க வேண்டிய அருவருப்பு நிலை ஏற்படுகின்றது.
அத்தோடு இது மழைக்காலமாக காணப்படுவதால் குப்பைகளில் நீர் தேங்கி ஈக்கள், நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்பாகவும் இது அமைகிறது. இதனால் டெங்கு போன்ற நோய்கள் உருவாகக்கூடும்.
ஆகவே இங்கு அசுத்தங்களை கொட்டும் நீங்கள் மற்றையவர்களும் உங்களை போன்ற மனிதர்கள் என்று சிந்தித்து மனித நேயத்தை கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.தயவு செய்து உங்கள் நலனுக்காக பிறர் நலனிள் பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள்.
சம்பத்தப்பட்ட அதிகாரிகளே இவர்களை கண்டுபிடித்து இவர்களுக்கு எதிரான கடும் சட்ட நடவடிக்கை எடுங்கள்.
ஏனென்றால் இது எமது ஊரின் முக்கிமான இடங்களில் ஒன்றாகும். இது போல் கிராம பகுதிகளில் கூட பொது இடங்களில் குப்பை கூழங்கள் கொட்டப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments