Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (e மனிதனின் இறுதி நேரத்தில்...) கவிதை தொகுப்பு.


Mohamed Nizous



அன்ட்றொய்ட் ஒழிஞ்சு போச்சு
பென் ட்ரைவ் அழிஞ்சு போச்சு
அப்பிள் அப்பால் போச்சு
அப்ஸ்கள் கப்ஸாவாச்சு



கூக்குரல் போட்டு அழைத்தும்
கூகிள் இனி வழிகாட்டாது.
பார்க்கும் யூடியூப் கணக்கின்
பாஸ்வேர்டும் மறந்து போச்சு



ஈமெய்ல் பார்த்ததெல்லாம்
இம்மையில் முடிஞ்சு போச்சு
இனிமேல் இருப்பதெல்லாம்
தனிமையில் இருப்பதுதான்



செற்றில் பாட்டுக் கேட்டல்
chatல் செற்றாய் இணைதல்
Netல் நேரம் கழித்தல்
முற்றும் முடிஞ்சு போச்சு



குறுப்பு அட்மின் ஆகி
நெருப்பாய் போட்ட செயார்கள்
கறுப்பாய் இருட்டாய் போச்சு
பொறுப்புக் கழண்டு போச்சு



பேஷ்புக் பேசாதினிமேல்
டேஷ் போர்ட் டிலீட்டாய் போகும்
பேஷ் பேஷ் என்ற கொமண்ட்கள்
ஓசை இன்றி மறையும்.



4G கவரேஜ் போச்சு
ஹாஜி பட்டம் போச்சு
மாஜியும் மாறிப் போச்சு
மிஞ்சி இருப்பதெல்லாம்
அஞ்சி செய்த அமலே.

Post a Comment

0 Comments