Subscribe Us

header ads

வாள்வெட்டில் காயமடைந்த பொலிஸாரை சந்தித்தார் பொலிஸ் மா அதிபர்

பாறுக் ஷிஹான்


யாழ்ப்பாணம் வந்த பொலிஸ் மா அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொலிஸ் உத்தியோகர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர நேற்று(31) யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று இரு பொலிஸார் மீது இனந்தெரியாத குழு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியது. அதையடுத்தே அவர் யாழ்ப்பாணத்துக்கு திடீரென வந்துள்ளதுடன் அண்மைக்காலமாக யாழ்.மாவட்டத்தில் பொலிஸார் மீது  இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து தாக்குதலாளிகளை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸ்  உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.


Post a Comment

0 Comments