அகில இலங்கை மக்கள் காங்ரசின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் கல்பிட்டி பிரதேச பிரதான அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் அவர்களின் தலைமையில் கற்பிட்டி பிரதேசத்தின் கரம்பை தொடக்கம் கற்பிட்டி வரையிலான பாலர்பாடசாலை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது.
இந்நிகழ்வானது, அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிறைச்சாலைகள், மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் அமைச்சர் திரு.சுவாமிநாதனின் நிதி ஒதுக்கீட்டில் ரூபாய் 5 மில்லியன் நிதி பாலர்பாடசாலைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்நிதியின் மூலம் பாலர்பாடசாலைகளின் அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருப்பதால், தேவையுள்ள பாடசாலைகளை இனங்கண்டு, எந்தெந்த பாலர் பாடசலைகளுக்கு எந்தெந்த தேவைப்பாடுகள் உள்ளதென்பதைக்கண்டறிந்து, தேவைகளை பிரதேச செயலகத்திற்கு முன்வைப்தற்கான யோசனைகள் கந்துரையாடப்பட்டன.
இன்றைய தினம் தேவையுள்ள சகல பாலர்பாடசாலைகளுக்கும், என்ன தேவையென்பதை, கடைசி தீர்மானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்ரசின் கற்பிட்டிப்பிரதேச உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன், நுரைச்சோலை Acmc அமைப்பாளர் அஸ்லம் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்ரசில் இணைந்துகொள்வதற்காக ஆசிரியர்கள் விருப்பத்துடன் விண்ணப்பப் படிவங்களைப்பெற்று அங்கத்துவம் பெற்றுக்கொண்டனர்
















0 Comments