இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் புதிய வருமான வரிச் சட்டமூலம் குறித்து முன்னாள் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
புதிய வருமான வரிச் சட்டமூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கு இசைவானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு ஏற்புடையதல்ல.
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு செலுத்தும் பங்களிப்பு பணத்திற்கு வரி அறவிடுதல், வாழ்க்கை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நடுத்தர குடும்பங்களின் வரி அதிகரித்தல், சமய வழிபாட்டு இடங்களில் வரி அறவிடுதல் என்பவற்றுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இணங்க முடியாது.
இதனால், எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் புதிய வருமான வரிச் சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


0 Comments