அம்பாறை மாவட்டம் ஒலுவிலில் விட்டின் முன்பாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதன் முழு விபரம்..
ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் தேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணியளவி
ல் இச்சடலம் மீட்கப்பட்டது.
ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் வசிக்கும் லாபீர் இன்லாப் என்னும் ஒலுவில் அல்-ஜாயிலா வித்தியாலயத்தில் தரம் – 1 இல் கல்வி கற்றுவரும் 5 1/2 வயது சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் வீட்டிலிருந்து பகல் 1 மணியளவில் அவருடைய சிறிய துவிச்சக்கர வண்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.
வெளியே சென்றவர் மிக நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் வீட்டார் உறவினர்களின் வீடுகள் உட்பட பல இடங் களில் தேடியும் கிடைக்காததால் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கெவிலும் அறிவித்தல் கொடுக்கப்பட்டு தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலைமையில் விடுமுறை தினத்தை யொட்டி தனது தாயின் வீட்டுக்கு குடும்பத் துடன் வந்த ஒருவர் தனது காரினை காலை
11 மணியளவில் வீட்டுக்குமுன்னால் உள்ள விதியில் நிறுத்தி விட்டு பகல் உணவை உண்டு உறவினர்களுடன் நாளை கழித்த பின்மாலை 5:30 மணியளவில் வீடுசெல்வதற்காக காரைத் திறந்தபோது அதனுள்ளே சிறுவன் ஒருவனின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து . வீதியால் சென்றவர்களிடமும் அதனைக் காட்டியுள்ளார்.
இச்சடலம் பெற்றோரால் தேடப்பட் டுவரும் சிறுவனின் சடலமென பார்த்தவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்களுடன் தொடர்பு கொண்டார். விரைந்து வந்த பெற்றோர் சிறுவன் மயக்க நிலையிலிருப்பதாகக் கருதி ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைக்கு அவசரமாக எடுத்துச்சென்றனர்.
வைத்தியசாலை வைத்திய அதிகாரி என்.அரிந்திரன் சிறுவனைப் பரிசோதித்தபோது சுமா இரண்டு மணித்தியாலத்திற்கு முன்னர் மரணித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று பொலிலாருக்குதகவலை தெரியப்படுத்திய தையடுத்து புலன்விசாரணை மேற்கொள்ளப் பட்டுவருகின்றது.
சடலம் ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து எடுத்துச் செல் லப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
0 Comments