வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது.
சர்ச்சைக்குரிய திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவியில் இருந்து விலகுமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கோரப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
அதேவேளை அமைச்சர் கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தவிர அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரவி கருணாநாயக்க கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
0 Comments