2018 இல் நியூசிலாந்தில் நடைபெற இருக்கின்ற 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் கனடா அணியில் விளையாடுவதற்கு காவியன் நரேஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
மத்திய தர வரிசை துடுப்பாட்ட வீரரும், சுழல் பந்து வீச்சாளருமான இவர் கனடாவில் உள்ளூர் போட்டிகளில் சி.சி.சி அணிக்காக விளையாடி வருகிறார்.
நியுசிலாந்தில் நடைபெற இருக்கின்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கான தெரிவுப் போட்டியில் 3 நாடுகள் பங்கெடுத்தன.
அந்த வகையில், கனடா அணிக்கும், அமெரிக்கா மற்றும் பேர்முடா அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டிகளில் கனடா அணி வெற்றி பெற்றுள்ளது.
கனடா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் காவியன் நரேஸ் கனடா அணியை உலகக் கோப்பையை நோக்கிய வெற்றிக்கு வழி வகுப்பார் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments