பேஸ்புக் ஆனது புதிய வீடியோ பிளாட்போம் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்ட இவ் வசதியின் ஊடாக நேரடி ஒளிபரப்புக்கள் மற்றும் எக்ஸ்குளூசிவ் வீடியோக்கள் என்பவற்றினை பார்த்து மகிழ முடியும்.
இவ் வசதியினை மொபைல் சாதனங்கள், டெக்ஸ்டாப் கணினிகள் மற்றும் பேஸ்புக் தொலைக்காட்சி அப்பிளிக்கேஷன் என்பவற்றினுடாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாகவும், பதிவு செய்தும் இந்த வசதியின் ஊடாக ஒளிபரப்பப்படவுள்ளது.
தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ் வசதியானது விரைவில் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
0 Comments