தேசிய தலைவர் அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீனின் சிந்தனையில் முகிழ்த்து அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்று நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்படும் மகளிர் பொருளாதார அபிவிருத்தியை நோக்காக கொண்ட மினி ஆடை தொழில் உற்பத்தி நிலையங்களில் சுமார் பத்து வரை ACMC புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீமின் வேண்டுகோள் படி புத்தளம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளன.
அவை கல்பிட்டியில் இரண்டு, கப்பலடியில் ஒன்று, புத்தளத்தில் ஆறு, கரைத்தீவில் ஒன்று என்ற எண்ணிக்கையில் இயங்கவிருக்கின்றன.
அவற்றின் முதல் கட்டமாக கல்பிட்டி, கப்பலடி பகுதிகளில் வருகின்ற வியாழன் அன்று மூன்று ஆடை உற்பத்தி பயிற்சி மையங்களையும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் MHM நவாவி அவர்கள் தலைமையேற்று திறந்து வைக்கவுள்ளார்.
-Ibrahim Nihrir-



0 Comments