Subscribe Us

header ads

கூடுதலான வட்டிக்கு கடன் வழங்குவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - கபீர் ஹாசிம்


கூடுதலான வட்டிக்கு கடன் வழங்குவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரச முயற்சியான்மை அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூடுதலான வட்டிக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வட்டியை அறவீடு செய்யும் நபர்களிடமிருந்து மக்களையும் வர்த்தகர்களையும் பாதுகாக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரச முயற்சியான்மை அமைச்சின் கீழ் இயங்கி வரும் நிறுவனமொன்றின் அபிவிருத்தி குறித்த கூட்டமொன்றில் அண்மையில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர முயற்சியான்மைகளில் ஈடுபடுவோருக்கு அரச வங்கிகளில் சலுகை அடிப்படையில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அதற்கான வழிமுறைகளை உருவாக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments