ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரிகள், இலங்கையர்களின் மூளையை சலவை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேஸ்புக்கின் தனிப்பட்ட மெசென்ஜர் சேவை ஊடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.
சிரியாவின் வட மேற்கு ராக்கா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய தற்கொலை குண்டுதாரி ஒருவர் கொல்லப்பட்டதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமாவா பிரச்சார நிறுவனம், அரபு மொழியில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், Abu Yusuf al என்ற இந்திய ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக SITE அமெரிக்க அடிப்படையிலான கண்காணிப்பு நிறுவனத்தின் உளவுத்துறை குழுக்கள் தெரிவித்துள்ளன.
எப்படியிருப்பினும் இந்திய முகவர்களால் ஐ.எஸ் கருத்துக்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது.
பேஸ்புக் வலைத்தளத்தில் ஹிந்தி மொழி செயற்படுத்தப்படுவதாகவும், இதன் ஊடாக இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை இளைஞர்களை தொடர்பு கொள்ளவும், மூளைச் சலவை செய்யவும், இளைஞர்களைப் பணியமர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.


0 Comments