12 லட்சத்திற்கும் குறைந்த வருட வருமானம் உடையவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ம் திகதி உள்நாட்டு இறைவரிச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டம் தொடர்பில் நிதி அமைச்சர் கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
வருட வருமானமாக 12 லட்சம் ரூபாவினை விடவும் அதிகளவு வருமானத்தை ஈட்டுவோரிடம் இருந்து மட்டுமே வருமான வரி அறவீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காத்திரமான ஒர் வருமான வரி அறவீட்டு முறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


0 Comments