தந்தையால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமியொருவர் தற்கொலை செய்து கொண்ட கொடுமையான சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஷாங்ஸி மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த குறிப்புகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த சிறுமியின் பெற்றோர் விவாகரத்துப் பெற்ற நிலையில் அவர் தனது அத்தையொருவருடன் வசித்து வந்துள்ளார்.
இதன்போது அவர் தனது தந்தையால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிறுமி அவரது தந்தையால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நேரத்தில் அவரது அத்தை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததுடன் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் அந்த சிறுமிவல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்கான சான்றுகளை சேகரிக்கும் நடவடிக்கையில் சிறுமியிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் அவர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை முடிவை நாடியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் மரணத்தையடுத்து அவரது தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ள னர்.


0 Comments