சம காலத்தில் மொபைல் சாதனங்களுக்கு அடிமையில்லாதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம்.
இவற்றின் பாவனை காரணமாக ஒவ்வொருவரிலும் பாரிய மாற்றங்கள் உண்டாகி வருகின்றன.
இப் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளும் இடம்பெற்று வருகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஒரு நாள் முழுவதும் எந்தவிதமான மொபைல் சாதனங்களையும் பயன்படுத்தாது இருந்தால் அந்த ஒரு நாள் ஒரு வருடம் முழுவதும் ஒருவரின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் உள்ள Telefónica அமைப்பு மற்றும் பென்சில்வேனியாவிலுள்ள Carnegie Mellon பல்கலைக்கழகம் இணைந்தே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளன.
இதற்காக 30 தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 11 பேர் மொபைல் சாதனங்களை நிறுத்தி வைப்பதனால் தங்களில் குறைந்தளவு மன அழுத்தமே காணப்படுவதாகவும், அதிகளவு ஓய்வு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 Comments