பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கையில் சிகரெட், மதுவுடன் எதிர்கட்சி ஆதரவாளர் பெண்ணை கட்டி பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
2010ம் ஆண்டு முதல் பிரித்தானியா பிரதமராக செயல்பட்டு வந்த டேவிட் கேமரூன், 2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேற ஆதரவாக மக்கள் வாக்களித்ததை தொடர்ந்து பதவி விலகினார்.
இந்நிலையில், மத்திய இங்கிலாந்தில் தனது வீட்டிற்கு அருகே நடந்த Wilderness இசை விழாவில் டேவிட் கமரூன் கலந்து கொண்டுள்ளார்.
இந்த விழாவில் கலந்துக்கொண்ட 29 வயதான கலை ஆலோசகர் லூசி எட்வர்ட்ஸ் என்ற எதிர்கட்சி ஆதரவாளர் பெண், டேவிட் கமரூனை கட்டி பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி தலைவரான கமரூன், கையில் மது, சிகரெட்டுடன், தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உடை அணிந்திருந்த லூசி எட்வர்ட்ஸை கட்டி பிடித்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
லூசி எட்வர்ட்ஸ் அணிந்திருந்த உடைக்கு பின்புறத்தில் தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பனின் பெயர் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒருவேனை கமரூன் அந்த பெண்ணின் பின்பக்கம் பார்க்காமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எனினும், முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி தலைவரான கமரூன், எதிர்கட்சி ஆதரவாளர் பெண்ணுடன் கட்டி பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.
0 Comments