Subscribe Us

header ads

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சிறந்த திருடன் - பந்துல குணவர்தன


ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சிறந்த திருடன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விமர்சித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பனிர் பந்துல குணவர்தன, வெளிவிவகார அமைச்சரே இந்த திருட்டுப் பட்டத்தை சூட்டியதாகவும் கூறினார்.
கொழும்பை அண்மித்த நகரமான இரத்மலானையில் நேற்றைய தினம் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.
“வெட்கம் மற்றும் பயம் என்ற நரம்புகள் செயலிழந்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க கொழும்பிலுள்ள மிகப்பெரிய இல்லமான விசும்பாய தனக்கு வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அமைச்சரவைப் பத்திரமொன்றை அவர் அண்மையில் அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார்.
கோட்டையில் கோடிக்கணக்கான பணத்தை விரயம் செய்து வீடு அமைக்கப்படுகின்ற நிலையில், அர்ஜுன் அலோசியஸ் 16 அரை கோடி ரூபா செலவிட்டு அவருக்காக வீடொன்றை வழங்கியுள்ள நிலையில் விசும்பாய வீட்டையும் கேட்கின்ற ரவி கருணாநாயக்கவுக்கு வீட்டுப் பைத்தியம் ஏற்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சருக்கு இப்படியும் ஒரு பேராசை, இப்படியும் ஒரு எதிர்பார்ப்பு. மக்களின் நலன்கருதியும், இனி நல்லதே நடக்கப்பட்டும் என்று எண்ணியும் ரவி கருணாநாயக்கவுக்கு விசும்பாய அல்ல, பாதாளமே கொடுக்கப்பட வேண்டும்.
அநகாரிய தர்மபாலவை திருடன் என்றார்கள். மஹிந்த ராஜபக்ச உட்பட முழு அமைச்சரவையும் திருடர்களே இருந்ததாக ரவி கருணாநாயக்க கூறினார். அப்படியென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், அந்த அமைச்சரவையிலும் 17 வருடங்களாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறந்த திருடராகும்” என்றார்.

Post a Comment

0 Comments