இலங்கையில் புதிய வகை தேசிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பயன்பாட்டிலுள்ள தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை ஒன்றை எதிர்வரும் இரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முதற் கட்டமாக புதிதாக அடையாள அட்டை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டையை வெளியிடுவதாக அதன் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த அடையாள அட்டையில் பல பாதுகாப்பு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டை வெளியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments