Subscribe Us

header ads

பிலியந்தலையில் துப்பாக்கி சூட்டுத் தாக்குதலில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர் (படங்கள் இணைப்பு)


போதைப்பொருள் சுற்றி வளைப்புக்கு சென்ற பொலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அலுவலர்கள் மீது பிலியந்தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.

கடந்த மே 09 ஆம் திகதி பிலியந்தல, மொரட்டுவ வீதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது தனது தந்தையாரின் கடைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த 11 வயதுடைய சமாதி ரன்சிகா எனும் சிறுமி உயிரிழந்ததுடன், அவரது முத்த சகோதரரான 17 வயதுடைய சதீப ருக்ஷான் மற்றும் தங்கையான 08 வயதுடைய செனூரி பத்திரன ஆகியோர் காயமடைந்தனர்.



உயிரிழந்த சிறுமியின் பெற்றோர், சகோதரர்களை இன்று சந்தித்த ஜனாதிபதி அவர்கள், அவர்களது சுகநலன்களை விசாரித்ததுடன், அந்த சம்பவம் தொடர்பில் தனது கவலையையும் தெரிவித்தார்.

காயமடைந்த பிள்ளைகளின் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அந்த குடும்பத்தின் எதிர்காலத்துக்காக நிதி அன்பளிப்பையும் வழங்கினார்.

Post a Comment

0 Comments