Subscribe Us

header ads

கொள்கை பிழை என்பதால் SLTJ அமைப்பிலிருந்து விலகிக் கொள்கின்றேன். - MSM ஸப்வான் DISc



அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்!

சில வாரங்களாக இயக்க பற்று, தனி நபர் விருப்பு எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நான் ஏற்றிருக்கும் கொள்கை குறித்து மீள்பரிசீலனை செய்ய வாய்ப்பு கிட்டியது. அதன் முடிவாக "குர்ஆனுக்கு முரண் என்று TNTJ மறுத்து SLTJ வழிமொழியும் எந்த ஸஹீஹான ஹதீஸும் உண்மையில் குர்ஆனுக்கு முரண்படாது" என்று முடிவுக்கு வரக் கிடைத்தது. எனவே ஹதீஸ் மறுப்பு கொள்கையிலிருந்து தவ்பா செய்து மீண்டு அதை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் SLTJ &TNTJ அமைப்பிலிருந்து முற்றாக விலகிக் கொள்கின்றேன். 

#இத்தகவல் கடந்த 14.07.2017 அன்று SLTJ & TNTJ க்கு EMail வழியாக அனுப்பப்பட்டுவிட்டது.

கடந்த 7 வருட காலங்களில் நான் SLTJ யின் தாயியாகவும் தலைமை, மாவட்ட நிர்வாகியாகவும் கடமை புரிந்துள்ளேன்.
இக்காலப் பகுதியில் கொள்கையை காரணமாக முன்வைத்து பலரோடு கடுமையாக வாக்குவாதப்பட்டு அவர்களில் மனதையும் ஆலமாக தாக்கும் விதத்திலும் நடந்துள்ளேன். அவற்றை
அல்லாஹ்வுக்காக பெருமனதுடன் மன்னிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் மன்னிக்காமல் மறுமையில் இறைவன் என்னை ஒரு போதும் மன்னிக்கப்போவதில்லை. அத்துடன் இது வரை இயக்க வளர்ச்சியையும் நிர்வாக திறமையயும் மாத்திரம் சரிகண்டு இத்தவறான கொள்கையை ஆதரிக்கும் அன்பர்களும் ஒரு சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

#இப்பதிவு_வெளிவராது என்று பலரும் எதிர்ப்பார்த்திருப்பார்கள். எதையும் முகம் கொடுக்கும் துணிச்சலுடன் தான் பதிவிடுகிறேன்.
அல்லாஹ் போதுமானவன்.

MSM ஸப்வான் DISc

Post a Comment

0 Comments