இந்த சீனா சுட்டி, கருத்தாக ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணியதன் ரிசல்ட் என்னாச்சு தெரியுமா? குளோபல் புகழ் கிடைத்திருக்கிறது பாஸ்! சீனாவின் ஹான்சூ பகுதியைச் சேர்ந்த சென் யீ என்ற சிறுவன், தம் பிடித்து செய்த புஷ் அப், சிட் அப்ஸ்களால் அவனின் வயிறு எய்ட் பேக்ஸ் அழகில் பளபளக்கிறது.
5 வயதிலிருந்து ஜிம் ட்ரெய்னிங் போகும் சென்யீ, உள்ளூரில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்றபோதுதான் அவனின் எய்ட் பேக்ஸ் பலருக்கும் ஆச்சர்யம் தந்தது. உடனே சோஷியல் மீடியாவில் சென்யீயின் படம் ஷேர் செய்யப்பட, குளோபல் வைரல் சுட்டியாகிவிட்டார் சென்யீ. கலந்துகொண்ட ஜிம்னாஸ்டிக் மேட்ச்சிலும் 6 தங்கம், 1 வெள்ளி என பிக் பாஸாக அடித்து நொறுக்கியது அடுத்த சாதனை!


0 Comments