Subscribe Us

header ads

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சந்தோசமான செய்தி


கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு டிஜிட்டல் முறைமை ஊடாக வழங்கப்படவுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் எதிர்காலத்தில் அவர்களின் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஊடாக 20 ஆயிரம் ரூபாய் போஷாக்குக் கொடுப்பனவு கிடைக்கப் பெறும். குறித்த திட்டத்தின் ஊடாக மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது.
இதேவேளை, இதற்கு முன்னர் அவர்கள் பிரதேச செயலகம் ஊடாக பெற வேண்டியிருந்தது. எனவே, அதனை இலகுபடுத்தும் முகமாக கையடக்கத் தொலைபேசி மூலம் குறித்த தொகைக்கான வவுச்சரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments