Subscribe Us

header ads

ஜெட் விமானங்கள் பறக்கும் போது அதன் பின்னால் வெள்ளை நிற கோடு வருகிறது ஏன் தெரியுமா?

பொதுவாக நம்மில் பலர் ஆகாயத்தில் விமான சத்தமொன்று கேட்டால் போதும் என்னவென்று பார்க்க தொடங்கிவிடுவார்கள். அதிலும் ஜெட் விமானத்தை பார்ப்பதற்கென்று ஒரு தனி கூட்டமே உண்டு. இதற்கு காரணம் ஜெட் விமானங்கள் பறக்கும் போது அதன் பின்னால் வெள்ளை நிற கோடு ஒன்று நேராக செல்வதேயாகும். அவ்வாறு ஏன் செல்கிறது என நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?
அதைப் பார்த்துள்ள பலர் அதைப் புகை என்று நினைப்பார்கள், ஆனால் அப்படி நினைப்பது தவறு. ஜெட் எஞ்ஜின் உள்ளே எரிபொருள் எரியும்போது, அதில் அடங்கி இருக்கும் ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனும் சேர்ந்து, நீராவியாக மாறுகிறது. நீராவி வெளியேற்றப்படுவது தான் நமக்கு வெள்ளைப் பட்டையாகக் கோடு வடிவத்தில் தெரிகிறது.
அது மட்டுமல்ல சில சமயங்களில் வெள்ளைக் கோடு மறையாமல் இருப்பதை அவதானித்து இருப்பீர்கள். அதற்கு காரணம் விமானத்தின் நீராவி வெளியாகும் பகுதியில் காற்று ஈரப்பதத்துடன் இருப்பதாகும். அப்படி ஈரப்பதம் அதிகரிக்கும் பட்சத்தில் இக்கோடுகள் மறைவதற்கான நேரம் அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments