Subscribe Us

header ads

கட்டாருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்படாத போதிலும் இலங்கையிலிருந்து கட்டார் செல்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை


கட்டாருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்படாத போதிலும் அந்நாட்டு அரசாங்கம் நிலையான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இலங்கை பணியாளர்களை அங்கு அனுப்பும் நடவடிக்கையில் எவ்வித சிக்கலும் இல்லை. சாதாரண முறையில் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கட்டார் வலுவான அரசாங்கம் என்பதனால் காணப்பட்ட உணவு பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அல்லது இலங்கையிலிருந்து செல்லும் பணியாளர்களுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கட்டார் நாட்டுக்குள் காணப்பட்ட விமான பயண நெருக்கடியும் தற்போது வரையில் தீர்க்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகளை அனுப்பும் நடவடிக்கை வழமையைப் போல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments