Subscribe Us

header ads

ஆகஸ்ட் மாதம் 2 ம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை ரீட்சைக்கான கருத்தரங்குகள் முன்னோடிப் பரீட்சைகள் நடத்த தடை


ஆகஸ்ட் மாதம் 2 ம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்த பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியினுள் முன்னோடி பரீட்சை வினாத்தாள் வழங்குதல் மற்றும் மேலதிக வகுப்புக்கள் நடத்துதல் என்பனவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிலையில், பரீட்சைகள் திணைக்களம் மேற்படி தடைகளை விதித்துள்ளது.
இந்த தடைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments