Subscribe Us

header ads

வைத்தியர் வர தாமதமானதால் வைத்தியராக நடித்த ஊழியர். - புத்தளத்தில் சம்பவம்



புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த வாரம் நபர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நோயின் காரணத்தால் சிகிச்சை பெர மேல் குறிப்பிட்ட வைத்திய சாலைக்குச் சென்றுள்ளார்.

அங்கே நோயாளர்கலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து வரிசையாக போய் தனக்குறிய இலக்கம் அழைக்கப் பட்டவுடன் வைத்தியரின் அறைக்குள் சென்ற பின் நோய்கள் பற்றிய விபரங்களை கேட்டறிந்த டாக்டர் மருந்து பட்டியலையும் எழுதிக்கொடுத்துள்ளார்.

மருந்து மாத்திரிகைகள் எழுதிக்கொடுத்த தாழில் வைத்தியரின் பெயர் குறிப்பிட்ட சீல் பதியப்பட்டிருந்ததால பரிசோதனை செய்யும் டாக்டரின் பெயரில் சந்தேகம் கொண்ட அந்த நோயாளி வைத்தியரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். 

அடையாள அட்டையை காண்பிக்க மருத்த வைத்தியர் மீது சந்தேகம் அதிகரித்ததால் உண்மையை அறிய வேண்டும் என எண்ணிய நோயாளி சிரமங்கலுக்கு மத்தியில் உண்மை அறிந்து கொண்டார். 

அன்றைய தினம் வைத்தியர் வர தாமதமானதால் வைத்தியராக நடித்தவர் அதே வைத்திய சாலையில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் என தெரிய வந்ததுள்ளது .

Post a Comment

0 Comments