சவால்களுக்கு பயந்திருப்பவர்கள் எனில் மகிந்த ஆட்சியிலிருந்து வெளியேறியிருக்க மாட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க பட்ட துன்பங்களை நான் இன்னும் அனுபவிக்கவில்லை. மகாத்மா காந்தி பட்ட துயரங்கள் எனக்கு வரவில்லை. இன்று மகாத்மா காந்தியைப் போற்றுகிறார்கள் என்றால் அவரின் பெருமையும், சவால்களை வெற்றி கொண்ட பண்பும் தான் காரணம்.
எமக்கு இந்த நாட்டிலுள்ள சகல சவால்களையும் வெற்றி கொண்டு நம் நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வோம். சவால்களுக்கு நாம் பயப்பட மாட்டோம்.
சவாலுக்கு நாம் பயந்திருந்தால் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருக்க மாட்டோம்.
விமர்சனத்துக்கும், சவாலுக்கும் பயப்படுபவர்கள் மனிதர்களே அல்லர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
0 Comments