அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிறிஸ்தவரே அல்ல என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். இத்தாலி நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ இடையே சுவர் எழுப்ப, அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இது மக்களை பிரித்தாளும் முயற்சி. இதேபோல் அவர் உலக மக்களை பிரித்தாள நினைக்கிறார். உண்மையான கிறிஸ்தவர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அதனால் டிரம்ப் கிறிஸ்தவரே அல்ல.
சர்வதேச பார்வையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் பல்வேறு விவகாரங்களில் ஒழுங்கற்ற மற்றும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கொள்கைகளையே கொண்டுள்ளனர். இவ்வாறு போப் கூறியுள்ளார். டிரம்ப், கிறிஸ்தவரே அல்ல என்று போப்பாண்டவர் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
http://www.telegraph.co.uk/news/2017/05/24/not-christian-three-key-issues-donald-trump-pope-francis-disagree/
http://www.telegraph.co.uk/news/2017/05/24/not-christian-three-key-issues-donald-trump-pope-francis-disagree/
0 Comments