உலகில் சமீபத்தில் புள்ளிவிவரங்களின்படி 70.1 சதவீதம் மக்கள் வெறும் 20 நாடுகளின்தான் இருக்கின்றனர். அதிலும் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில் 18.5 சதவீதமும், இந்தியாவில் 17.9 சதவீதமும் மக்களும் வசிக்கின்றனர். அதாவது 36.4 சதவீத மக்கள் இந்த 2 நாடுகளில் மட்டும் வசிக்கின்றனர். சீனா, இந்தியாவிற்கு அடுத்து 3வது இடத்தில் இருக்கும், பெரிய நிலப்பரப்பை வைத்திருக்கும் அமெரிக்காவில் 4.3 சதவீதம் பேர் தான் உள்ளனர்.
சீனாவை விட பெரிய நிலப்பரப்பை கொண்டிருக்கும் ரஷ்யாவில் 1.9 சதவீத மக்கள்தான் வாழ்கின்றனர். இந்த 20 நாடுகளில் கடைசி இடத்தில் உள்ள தாய்லாந்தின் மக்கள் தொகை 0.9 சதவீதம் மட்டுமே. அதனால் எஞ்சியுள்ள 213 நாடுகளில் உள்ள மக்கள் தொகை 29.8 சதவீதம் தான்.
முதல் 20 இடங்களில் உள்ள நாடுகளில் ஜெர்மன், ரஷ்யாவை தவிர இதர ஐரோப்பிய நாடுகள் வேறு எதுவுமில்லை. ஆப்ரிக்கா நாடுகளில் எத்தோப்பியா, காங்கோ, நைஜிரியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும் வட அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா, மெக்சிகோவும் , தென் அமெரிக்க நாடுகளில் பெரிய நிலப்பரப்பை கொண்ட பிரேசில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மற்றவை அனைத்தும் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள்தான். அதிலும் இந்திய ஒன்றியம், பாகிஸ்தான், பிறகு வங்காளதேசம் என்று இந்தியா பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் மக்கள் தொகை பெருக்கத்தில் சீனாவை எப்போதே மிஞ்சியிருப்போம்.
ஐக்கிய நாடுகள் சபையின் 2017ம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகில் மக்கள் தொகை 760 கோடியாகும். இது 1990ம் ஆண்டு 530 கோடியாக இருந்துள்ளது. இனி 2030ம் ஆண்டில் 860கோடியாகவும், 2050ல் 980 கோடியாகவும், நாம் யாரும் பார்க்க முடியாத 2100ம் ஆண்டில் 1120 கோடியாகவும் இருக்கும் என்கிறார்கள்.ஐநாவை 2016ம் ஆண்டு வரை அங்கு இருந்த நாடுகள் எண்ணிக்கை 195 மட்டும்.
இன்றைய நிலவரப்படி உலகின் மக்கள் தொகை 760 கோடி. அதை வைத்து எந்த நாட்டில் எவ்வளவு என்று கணக்கு போட்டுக் கொள்ளலாம்.
அர்ஜன்டைனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈக்வடார், ஏமன், ஐவர்கோஸ்ட், சவுதி அரேபியா, கனடா, நியூசிலாந்து, மலேசியா, தென் ஆப்ரிக்கா என உலகில் எஞ்சியுள்ள 213 நாடுகளின் மக்கள் தொகை 29.8 சதவீதமாகும். குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு வட்டிகன் மாநகரம். பரப்பளவிலும் சிறிய நாடான அங்கு இப்போது 801 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
0 Comments