சவுதியில் பெண்கள் குட்டைப் பாவாடையோ, நவீன ஆடைகளோ அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பர்தா அணிந்து முகத்தையும் தலையையும் முழுவதுமாக மூடிக்கொண்டுதான் வெளியே வரவேண்டும். அதுவே சவுதி அரச சட்டமாகும். அந்த சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சவுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், குட்டைப் பாவாடை அணிந்து, சவுதியின் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இடத்தில் நடந்து செல்வது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வீடியோ எடுக்கப்பட்ட இடத்தில் இஸ்லாமிய பாரம்பரியத்தை கடுமையாக கடைப்பிடிக்கும் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments