Subscribe Us

சவூதி அரேபியாவின் அழுத்தத்திற்கு அடி பணிந்தது அமெரிக்கா : மூடிய கதவுகளை திறந்தது இஸ்ரேல்.....!!

முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

இஸ்ரேல் திடீரென பைத்துல்முகத்தஸை மூடி அங்கு பாங்கு சொல்வதற்கும், தொழுகை நடத்துவதற்கும் தடை விதித்தது.

இதனால் பாலஸ்தீன முஸ்லிம்கள் மட்டுமின்றி உலக முஸ்லிம்கள் பேரதிர்ச்சியடைந்தனர்.

இஸ்ரேலின் அராஜகத்திற்கு பாலஸ்தீன் முஸ்லிம்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில்...

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து உடனடியாக பைத்துல்முகத்தஸ் திறக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்ததின்பேரில் இஸ்ரேல் மூடிய கதவுகளை திறந்து முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டிற்கு வழிவிட்டது.

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் சிறப்பான பணிகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.

-Muga Nool Muslim Media-

Post a Comment

0 Comments