Subscribe Us

header ads

கத்தார் அமெரிக்காவுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது - சவூதி கூட்டணி...!

தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி சென்றடைவதை கட்டுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்காவுடன் இணைந்து கத்தார் ஒப்பமிட்டிருப்பது மாத்திரம் அந்நாட்டின் நடவடிக்கைகளை நம்புவதற்குப் போதுமான தில்லையென சவூதி, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துதெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் நேற்றைய தினம் கத்தார் சென்றிருந்த நிலையில் இவ்வாறு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டிரு ந்தன. எனினும், இது மாத்திரம் கத்தாரை நம்புவதற்குப் போதுமானதில்லையென சவூதி தரப்பு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் சவூதி விஜயம் செய்யும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அங்கும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2014ல் கத்தாரின் இஹ்வான்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எதிர்த்து உருவான பிணக்கினைத் தீர்த்துக் கொள்ள கத்தார் இணங்கிக் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கத்தார் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Mohamed Hasil)

Post a Comment

0 Comments