புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் போது பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை மட்டுப்படுத்துங்கள் என தமிழ், முஸ்லிம் மக்கள் என்றுமே கோரவில்லை. மாறாக தங்களது மதச்செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான உரிமைகளை மாத்திரமே கோரினர் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
நேற்று களுத்துறை தொடங்கொடை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடச் சென்றிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள் ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் இன, மத வேறுபாடுகளை களைதல் ஆகியனவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். அனைத்து இனங்களும் மதங்களும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் ஒரு நாடு என்ற வகையில் வளர்ச்சியடைய முடியும்.
எனவே தற்காலத்தில் நாம் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தற்போது புதிய அரசியமைப்பில் பெளத்த மதத்திற்கான முதன்மை நிலை மாறுபடும் என்று கூறப்படுகின்றது. அவ்வாறான எந்த ஒரு பேச்சுக்களும் தற்போது வரையில் எழவில்லை.
அதேநேரம் அரசிய லமைப்பு மாற்றங்க ளின் போது பெளத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமையை மட்டுப்படுத்த வேண்டும் என்று இந்நாட்டு தமிழ், முஸ் லிம் மக்கள் கோரவில்லை. அதனால் பெளத்த மத்தின் முன்னுரிமையையும் பாதுகாத்துக்கொண்டு மற்றைய மதத்தவர்களின் கடமைகளை செய்வதற்கும் இடமளிக்க வேண்டும்.
உலக நாடுகள் அனைத்தும் இவ்வாறுதான் செயற்படுகின்றன. எனவே சிலர் உண்மைக்கு புறம்பான விடயங்களையே கூறிக்கொண்டிருக்கின்றார்கள். அரசியலமைப்பு இன்னும் ஒரு சாசனமாக வகுக்கப்படவே இல்லை என்கின்றபோது எந்தவித ஆதாரங்களும் இன்றியே இவர்கள் பேசுகின்றார் கள்.
எவ்வாறாயினும் இவ்வாறு போலியான கருத்துக்களை வெளியிடுகின்றவர்கள் குறு கிய அரசியல் நோக்கத்திலேயே செயற்படு கின்றார்கள். இந்த நிலைப்பாடுகள் தொடர்ந் தால் அழிவை நோக்கியே பயணிக்க வேண் டிய நிலை ஏற்படும் என்றார்.


0 Comments