Subscribe Us

header ads

மதவாக்குளம் பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள கல் குழியில் குளிப்பதற்காகச் சென்ற தம்பதியினரில் கணவர் சடலமாக மீட்பு

முஹம்மது முஸப்பிர்

பள்ளம மதவாக்குளம் பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள கல் குழியில் குளிப்பதற்காகச் சென்ற புதுமணத் தம்பதியினரில், மனைவி காப்பற்றப்பட்டுள்ளதுடன், கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.
ஆராச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த ராஜரத்ன ரஞ்சன குமார (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டவராவார்.
ஆராச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், பள்ளம  பிரதேசத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு 11.30 மணியளவில்  அப்பிரதேசத்தில் உள்ள கல் குழியில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். 
புதுத் தம்பதியினர் குளிப்பதற்கு ஆயத்தமான போது சுமார் 30 அடி ஆழமான  குழியினுள் மனைவி வீழ்ந்ததால் மனைவியைக் காப்பாற்ற முனைந்த கணவர் மனைவியைக் காப்பாற்றிய போதிலும் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழியில் வீழ்ந்து காணாமல் போன இளைஞரின் சடலத்தை மீட்பதற்காக நேற்று   கடற்படை நீச்சல் பிரிவினரின் ஒத்துழைப்பை பெறப்பட்டு தேடுதல் மேற்கொண்டதில் அவ்விளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாகத்  தெரிவித்த பள்ளம பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments