Subscribe Us

header ads

முந்தல் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கருவாமடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அப்பியாசக் கொப்பிகள்

ரஸீன் ரஸ்மின்

முந்தல் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கருவாமடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வொன்று, திங்கட்கிழமை இடம்பெற்றது.
பெருக்குவற்றான் கிராம பதில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.ரஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கருவாமடு சமுர்த்தி சங்க அங்கத்தவர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.
2016இல் இடம்பெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு வாரங்களையொட்டி, கருவாமடு கிராம மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணத்தில் இருந்தே, மேற்படி அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

Post a Comment

0 Comments