பயணச் சீட்டு இன்றி ரயிலில் பயணித்த குற்றத்திற்காக 68 பிரயாணிகளிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக ரயில்வே போக்குவரத்து கட்டளைப் பிரிவு அறவிட்டுள்ளது.
கொழும்பு - மருதானை, பிரதான ரயில் நிலையத்தில், கடந்த 14ஆம் திகதி மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலான 3 மணித்தியால காலப்பகுதிக்குள் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறான 68 பேரையும் பிடிப்பதற்கு முடிந்ததாக, ரயில்வே பாதுகாப்பு படைப் பிரிவு பிரதம அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்தார்.
பயணச் சீட்டின்றி ரயிலில் பிரயாணம் மேற்கொண்ட குற்றத்திற்காக ஒரு பயணியிடமிருந்து 3020 ரூபா வீதம் 59 பயணிகளிடம் தண்டப் பணமாக 1,78,180 ரூபா அறவிடப்பட்டதாகவும், ஏனைய 9 பயணிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு தண்டப் பணத்தை பின்பு வழங்குவதற்கான ஒப்பந்த அடிப்படையில் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய 9 பிணைகளை முன்னிறுத்தி, அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமை புரியும் பணியாளர்கள் உள்ளிட்ட இரண்டு மற்றும் மூன்று மாதங்கள் வரையில் காலாவதியான பருவச் சீட்டுகளை பயன்படுத்திக் கொண்டு, ரயிலில் பிரயாணம் செய்தவர்களையே இவ்வாறு பிடி க்க முடிந்ததாகவும் பிரதம அதிகாரி தெரிவித்தார்.
0 Comments