Subscribe Us

header ads

‘இறந்தவர்’ 45 நிமிடங்களில் உயிர்பிழைத்தார்!


மாரடைப்பு காரணமாக நாடித் துடிப்பு நின்றுபோன ஒருவர் சுமார் 40 நிமிடங்களுக்குப் பின் உயிர் பிழைத்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றிருக்கிறது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 36 வயதான ஜான் ஆக்பர்ன் என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி நபர்.

தனது லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்த ஆக்பர்னுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து 911 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைத்த அவரது வீட்டுக்கு இரண்டு போலீஸ்காரர்கள் வந்திருக்கின்றனர்.

அப்போது, ஆக்பர்ன் அசைவற்றுக் கிடந்திருக்கிறார். அவரது இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு நின்றுவிட்டது.

அந்நிலையில் போலீசார், சி.பி.ஆர் (Cardiopulmonary resuscitation)  முறைப்படி ஆக்பர்னின் இதயத்தை இயங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

சுமார், 42 நிமிடங்கள் வரை மீண்டும் மீண்டும் அவருடைய நாடித்துடிப்பு வரும் வரை இருவரும் அந்த முயற்சியை அவர்கள் கைவிடவில்லை.

கடைசியில், நாடித்துடிப்பு வந்த பின்னர் ஆக்பர்ன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு, விரைவில் குணமடைவதற்காக அவர் ஒரு வாரத்துக்கு கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்தாராம்.

சமீபத்தில் ஆக்பர்ன் முழுமையாகக் குணம் பெற்றுவிட்டார். மார்பில் உள்ள காயங்களைத் தவிர, தான் முழுமையான குணமடைந்து விட்டது போல உணர்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆக்பர்ன் அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல, அதிசயமனிதரும் கூடத்தான்!

Post a Comment

0 Comments