Subscribe Us

header ads

புழுதிவயல் வைத்தியசாலையில் 20 மில்லியன் ரூபா பொறுமதியான வேலைதிட்டங்கள் ஆரம்பித்து வைப்பு.


புத்தளம் மாவட்டத்தின் புழுதிவயல் கிராம வைத்திய சாலையை தரமுயர்த்துவதற்காக வடமேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ S.H.M.நியாஸ் அவர்களின் வேன்டுகோளுக்கினங்க சுகாதார சுதேசிய பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் பிரதி தேசிய அமைப்பளருமான அல்ஹாஜ் பைசல் காசிம் அவர்களினால் முதற்கட்டமாக இருபது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மன் சென்றிருக்கும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்கள் நாடு திரும்பியதும் அடுத்தவாராம் வேலைதிட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
அதே நேரம் புத்தளம் மாவட்டத்தின் ஏனைய வைத்திய சாலைகளுக்குமான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. கொத்தாந்தீவு 20மில்லியன். சமீரகம 10மில்லியன் கரைத்தீவு 20 மில்லியன் நாகவில்லு 20மில்லியன் ரூபா பெறுமதியான வேலைதிட்டங்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. புத்தளம் தள வைத்தியசாலை மற்றும் கற்பிட்டிய வைத்திய சாலைகளின்gb வேலைகளை சுகாதார பிரதியமைச்சரினால் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

Post a Comment

0 Comments