எம்.எஸ்.எம் ஆஸிப்
(முகாமைத்துவ பீடம்)
எந்த நோக்கத்திற்காக ஒரு ஆட்சியில் இருந்து மற்றுமொரு ஆட்சி உருவாகுவதற்கு முழுவதுமாக ஒத்துழைப்பு வழங்கினோமோ அந்த நோக்கம் தவிடுபொடியாகி பேரினவாத செயற்பாடுகள் முன்னரை விட தலைதூக்கியுள்ள நிலையில் வாழ்நாளை நகர்த்தும் ஒரு காலகட்டம் இது....
இச் சூழ்நிலையில் இனவாததிற்கு எதிராக முஸ்லீம் அரசியல் தலைமைகளின் உரிமைக் குரல் என்பது முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவருகின்றது....
அந்த வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடந்த MR ஆட்சியிலும், My3 ஆட்சியிலும் சரி இனவாததிற்கு எதிராக அமைச்சரவையிலும் பாராளுமன்றதிலும் #துணிச்சலாககுரல்கொடுத்துவருதல் என்பது பேரினவாதிகளுக்கு பாரிய ஒரு தடைக்கல்லாகவும் சவாலாகவும் அமைகின்றது என்பது பல்வேறு காரணிகளின் மூலம் தெளிவாகிறது...
அவற்றில் #பலவந்தமாகவெளியேற்றப் பட்ட மக்களை #அவர்களதுசொந்த_இடங்களில் #மீளக்குடியமர்த்தியதை காட்டை அழிப்பதாகவும்.... வீடின்றி அவதிப்படும் மக்களுக்கு வீடுகளை வழங்கியதை முஸ்லிம் கொலனிகளை அமைப்பதாகவும்,
சிறுபான்மையினருக்கு ஏற்படும் பிரச்சினை,
அனாச்சாரங்களுக்கும் எதிராக குரல் கொடுப்பதால் இனவாதி என்றும் பல சாயங்களைப் பூசி #அபாண்டங்களைச் சுமத்தி எவ்வாறாயினும் அமைச்சரின் ஆட்ட ஓட்டங்களை ஒடுக்க வேண்டும் என்ற(அல்லாஹ் போதுமானவன்) நோக்கில் ரிஷாட் பதியுதீன் மீது நேரடியாக குறிவைத்து செயற்படுகின்றனர் என்பது பேரினவாதிகளின் ஊடக சந்திப்பின் மூலமும் இனவாத இணைய தளங்களின் அபாண்டங்களை சுமத்தி வருவதன் மூலம் புலனாகிறது....
இவ்வாரானதொரு பாரிய எதிர்ப்பையா அல்லது தாக்கங்களையோ முதன் முதலில் முஸ்லிம்களுக்கு என்று உருவாகிய கட்சியின் தற்போதைய தலைமையோ அல்லது ஏனைய முஸ்லீம் தலைவர்களோ எதிர்கொள்ளவில்லை என்றால் தற்காலத்தில் முஸ்லீம்களின் உரிமைகளுக்காக தன்னை முழுமையாகவும் துணிச்சலாகவும் அர்ப்பணித்து செயற்படும் ஒரு தலைமை ரிஷாட் பதியுதீன் என்பது #பேரினவாதிகளுக்கு_புரிந்துள்ளது என்பதே யதாரத்தம்....
எம்மில் சிலர் போ(ரா)ளிகளை நாட்டின் சமகால நிலைப்பாட்டில் எமது உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது?, எவ்வாறான ஒரு தலைமையுடன் கைகோர்ப்பது என்பது போன்ற #பேரினவாதிகளுக்கு_தெரிந்த _யதார்த்தத்தை கூட அறியாமல் செயற்படாமல் இருப்பது அவர்களின் அறியாமையையே வெளிப்படுத்துகின்றது....
எதிர்காலங்களிலாவது உண்மையை சரிவர புரிந்து எமது உரிமைகளைப் பாதுகாக்க பொருத்தமானதொரு தலைமைத்துவத்துடன் ஒன்றித்து பயணிக்கும் காலம் மலர பிரார்த்தனை செய்கின்றோம்...
0 Comments