Subscribe Us

header ads

மான் இறைச்சியுடன் நால்வரும் மயில் இறைச்சியுடன் இருவரும் புத்தளத்தில் கைது

மான் இறைச்சியுடன் நால்வரும் மயில் இறைச்சியுடன் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, புத்தளம் செல்லம்குந்தல் காட்டுப் பகுதியில், கடந்த (21) காலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே, மான் இறைச்சியுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டனர் என, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து 35 கிலோகிராம் மான் இறைச்சி கைப்பற்றப்பட்டதுடன், இறைச்சியாக்கப்பட்ட மானின் உடற்பாகங்களும் மீட்கப்பட்டன.
அவர்கள் 4 பேரையும் கைதுசெய்துகொண்டு திரும்பும்போது கிடைத்த தகவலையடுத்து, கல்லடி, மதுரகம பகுதியில், மயிலை இறைச்சியாக்கி சமைத்துக் கொண்டிருந்த இருவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மயிலைக் கொலைசெய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட போரோ 12 துப்பாக்கியையும் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வெயில் காலம் என்பதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டு விலங்குகளே இவ்வாறு கொல்லப்பட்டு, இறைச்சியாக்கப்படுவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments