Subscribe Us

header ads

புத்தளம் நீதிமன்றத்தின் கூரையைப் பிரித்து கேரளக் கஞ்சாவைத் திருடி விற்க முயன்ற இருவர் பாலாவி பிரதேசத்தில் கைது


புத்தளம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சாவைத் திருடி விற்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் இருவரைக் கைதுசெய்துள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 20, பாலாவி பிரதேசத்தில், சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரைக் கைதுசெய்து பரிசோதித்தபோதே, அவர்களிடமிருந்து 5 கிலோகிராம் கேரளக் கஞ்சாவைக் கைப்பற்றியதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரெண்டு பேரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில், ஒரு குழுவாகச் சேர்ந்து, புத்தளம் நீதிமன்றத்தின் கூரையைப் பிரித்துக்கொண்டு, 20 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடந்த 5ஆம் திகதி களவெடுத்துள்ளமை தெரியவந்தது. அத்துடன், மீதமான 15 கிலோவையும் அவ்வப் பொழுது விற்றுவிட்டனர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று தெரிவித்த பொலிஸார், அந்த இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments