Subscribe Us

header ads

வடை உணவுகள் விற்கும் ஒரு ஏழையின் வியாபாரத்தை நாசமாக்கிய அக்கரைப்பற்று விசமிகள்


நான்கு குழந்தைகளுக்கும் வடை விற்று உணவு, கல்வி கொடுக்கும் ஓர் ஏழைத் தந்தையை, அவன் தொழிலை துவம்சம் செய்துள்ளீர்கள். அழிந்து போவீர்கள் கவனம்!
தொழிலில் போட்டியிட உங்கள் பொருட்களை தரமிக்கதாக்குங்கள், மக்கள் உங்களைத்தேடி வருவார்கள். மற்றைய மனிதனின் வயிற்றில் அடிக்காதீர்கள், நீங்கள் மட்டுமல்ல உங்கள் பரம்பரையும் அந்த பாவச்சுமையை தாங்காது.
இன்று எமது பிரதேசத்தில், குறித்த ஒரு ஏழை வடை வியாபாரியின் வாகனத்தை உடைத்து, அவனுக்கும் அடித்து விரட்டியிருக்கிறார்கள் சில காடையர்கள். காரணம் மக்கள் தம்மிடம் மட்டுமே பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டுமென்று.
மனதை உலுக்கிய ஒரு சம்பவம். இறைவன் உங்கள் உணவில் உங்களுக்கு பரக்கத் செய்ய பிரார்த்தியுங்கள். இன்னொருவன் உணவை துவம்சம் செய்யாதீர்கள். அழிந்தே போவீர்கள்.
சோயா கொண்ட சமூசாவை விற்பனை செய்யும் முதலாளியினால் இறைச்சி சமோசா விற்பனை செய்து வந்த சகோதரர் தாக்கப்பட்டுள்ளார் 
நோம்புக்காலம் அல்லாஹ் பாதிக்கப்படடவரின் துஆவை ஏற்றுக்கொள்வானாக ஆமீன் ஆமீன்

சம்பவம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது சம்பவம் நடைபெற்ற இடம் புதுப்பள்ளியடி நிலாம் ஹோட்டல் அருகாமையில் 

Ceylon tamil news .



Post a Comment

0 Comments