Subscribe Us

header ads

இன்றைய இலங்கையணியின் ஒரே ஒரு இரும்பு மனிதர் - அஞ்சலோ மெத்தியுஸ்


"எந்த இடத்தில் எப்படி விளையாட வேண்டும்" என்ற பெரும் கோட்பாட்டை ஓர் அச்சரம் பிசகாமல் செய்துகாட்டும் திறமை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை!
போதுமான ஓய்வுகள் இன்றி மீண்டும் மீண்டும் தன்னை வருத்திக்கொண்டு உபாதைக்குள்ளாகும் தியாகம் ஒன்றுக்காகவேணும் இந்த நாடு வாழ்நாள் முழுதும் கடமைப்படுள்ளது.
பிரமாண்டமான வெற்றிகளைக்கூட ஒற்றைப்புன்னகையால் கடந்து போகும் அந்த பக்குவத்தில் 'கோஹ்லி' போன்ற வகையறாக்கள் நிறைய பாடம் படிக்க வேண்டியுள்ளது. ஆம் அது இலங்கையர்களுக்கே உரிய பெருந்தன்மை. முரளி, சங்கா, மலிங்க போன்ற சாதனை வீரர்களின் பாசறையில் வளர்ந்தவன் அல்லவா மெத்தியூஸ்!
ஒரு மிடுல் ஓடர் பெட்ஸ்மேனாக, ஒரு டிபன்டிங் போலராக, ஒர் அழுத்தம் நிறைந்த தலைவனாக என அத்தனை வகிபாகங்களிலும் ஒரே முகபாவனையோடு கொஞ்சம் கூட பதற்றமின்றி விளையாடும் அந்த நிதானத்திற்கேதும் ஈடுண்டோ!?
மெத்தியுஸ் விழுந்து விழுந்து க்றீஸ் பண்ணும்போதல்லாம் ஒரு பரிதாபம் செறிந்த ஏக்கம் பற்றிக்கொள்கிறது. எங்கே உபாதை தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சம் இருக்கையின் நுனிவரை அழைத்துச் செல்கிறது.
இன்றைய இலங்கையணியின் ஒரே ஒரு இரும்பு மனிதர். ஒரே ஒரு நம்பிக்கை.
சங்காவோ மஹேலவோ இல்லாத குறையை ஒற்றை ஆளாய் நின்றுபிடிக்கும் ஜீவன் அஞ்சலோ!

-VTM IMRATH

Post a Comment

0 Comments