Subscribe Us

header ads

முஹம்மத் பின் அப்துல்லாவின் முடிக்குரிய இளவரசர் பதவியை ஏன் விமர்சிக்க வேண்டும்


சவூதி அரேபியாவின் சனத்தொகையில் 75 வீதமானவர்கள் 35 வயதிற்கு குறைந்தவர்கள் நாட்டின் அடுத்த தலைமைத்துவம் இளைஞர்களின் கைக்கு வரவேண்டும் என்பதை அவர்கள் விரும்புகிறார்கள் அதன் எதிரொலிதான் முப்பத்தொரு வயதான முஹம்மத் பின் அப்துல்லாவின் முடிக்குரிய இளவரசர் பட்டம்.

நமது நாட்டிலும் கூட நமது பாராளுமன்ற பிரதிநித்துவம் இளைஞர்களின் கைக்கு செல்ல வேண்டும் என்றும் நமது நாட்டின் ஆட்சி இளைஞர்களின் கைகளுக்கு செல்ல வேண்டும் என்றும் நாம் எப்போதுமே விரும்பியதில்லையா ? அது பற்றி பேசியதில்லையா ? விரும்பியிருக்கிறோம் பேசியிருக்கிறோம் மறுப்பவர்கள் முன் வரலாம்.

நமது நாட்டில் இளைஞர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பும் நாம் சவூதி அரேபியாவில் வந்தால் மட்டும் விமர்சிக்கிறோம். முஹம்மத் பின் அப்துல்லாவின் பொருளாதார திட்டம் பரந்தளவானது அது எதிர்கால சவூதி அரேபியா எரிபொருளை மட்டும் நம்பியிருக்க கூடாது என்பதை சொல்கிறது. சவூதி அரேபிய இளைஞர்கள் முஹம்மதை நம்புகிறார்கள் அதில் நமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.

ரோயல் பெமிலியில் அங்கம் வகிக்கும் 34 உறுப்பினர்களில் 31 உறுப்பினர்கள் வாக்களித்துதான் முஹம்மதை இளவரசராக தெரிவு செய்தார்கள் இதே உறுப்பினர்கள்தான் நயீபை கூட இளவரசராக தெரிவு செய்திருந்தார்கள் அவர்கள் முஹம்மத்தான் வேண்டுமென்று கூறும் போது குறுக்கால் நிற்கும் நாம் யார் முஹம்மதின் தெரிவை விமர்சிக்க ?

57 வயதான நயீப் இருக்கும் போது 31 வயதான முஹம்மத் பின் அப்துல்லா முடிக்குரிய இளவரசராக வந்தது தவரென விமர்சிக்கும் இஹ்வானிய ஆதரவாளர்கள் தனது 33 வயதில் கட்டாரின் அரியாசனம் ஏறிய தமீம் அல்தானியை பிழை காணவும் விமர்சிக்கவும் முன் வரவில்லையே அது ஏன் ?

நாமல் ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை கொண்டாடும் நீங்கள் முஹம்மத் பின் அப்துல்லாவின் முடிக்குரிய இளவரசர் பதவியை விமர்சிப்பது விந்தையிலும் விந்தை.

-Razana Manaf-

Post a Comment

0 Comments