ஞானஸார தேரரை விட முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள் இந்த பின்னூரிகள். (நல்ல பின்னூரிகளும் ஓரிருவர் இருக்கின்றனர்). குறிப்பாக நபி வழி மருத்துவ மாபியாவை ஆரம்பித்து வைத்த இந்த நுஸ்ரான் பின் நாதாரி இதில் முக்கியமானவர். இவரது உரைகள் சிலவற்றைக் கேட்டேன். இஸ்லாமே வெறுத்துப் போகும் அளவுக்கு இருந்தது. அந்தளவுக்கு அலர்ஜி. இந்த ஆளுடைய பயான்களைக் கேட்டு இரத்த அழுத்தத்தினை அதிகரித்துக் கொள்வதனை விட பௌத்த ஹாமுதுருமாரின் நல்ல, அமைதியான உபன்னியாசங்களைக் கேட்கலாம். பேச்சிலே எந்தப் பண்பாடுமற்ற, அறநெறிகள் இல்லாத, தன்னை விட்டால் ஆள் இல்லை என்ற தோரணையில் எல்லோரையும் சாடும் ஒரு மிகக் கேவலமான தொனியில் தான் இவரது பயான்கள் இருக்கும்.
இந்தக் கேடு கெட்ட முல்லாதான் நபிவழி அடிப்படையிலான திடல் தொழுகையை இழிவுபடுத்தி அண்மைக்காலமாக பிரச்சாரங்கள் செய்து வந்தார். இந்தப் பாமரப் புக்கை சொல்லும் அனைத்தையும் வேதவாக்காகக் கொள்ளும, இலங்கையிலுள்ள மிகப் பாமர மக்களில் ஒரு குழு மேற்கொண்ட மிகக் கேவலமான ஒரு தாக்குதலின் காரணமாக நேற்று பெருநாள் தினத்தில் ஒரு முதியவரின் உடம்பு முழுவதும் இரத்தத்தால் நனைந்து விட்டது. நேற்றே இதற்கெதிராகக் காராசாரமான ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். ஆனால் பெருநாள் என்ற காரணத்தினால் பொறுமையாக இருந்து விட்டேன். ஆயிரம் ஞானஸாராக்கள் வந்தாலும் இந்த இழிகூட்டம் திருந்தாது. ஜம்இய்யதுல் உலமா என்ற பொம்மை சபை இதிலும் கள்ள மௌனம் சாதிக்கும் என்பது உறுதி.
இந்த பின்னூரிகளை உலமா சபை விலங்கிடாவிட்டால் இனிவரும் பெருநாட்களில் திடல் தொழுகைக்கு பொலிஸ் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும்.


0 Comments