Subscribe Us

கல்பிட்டி நைட் பஸார் கழகத்தால் அல் அக்ஸா மைதானத்தில் நடாத்தப்பட்ட பகல் இரவு உதைப்பந்தாட்ட போட்டியில் நைட்பஸார் அணி வெற்றி வாகை

நேற்று கல்பிட்டி நைட் பஸார் கழகத்தால் அல் அக்ஸா மைதானத்தில் நடாத்தப்பட்ட பகல் இரவு உதைப்பந்தாட்ட போட்டியில் நைட்பஸார் அணி இறுதி போட்டியில் 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்று முதல் பரிசான ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசையும் வெற்றி கிண்ணத்தையும் தட்டிச்சென்றது.

இரண்டாவது இடத்தை பெற்ற மன்னார் வான்கோழி அணியினர் ஐம்பது ஆயிரம் ரூபாய் பணப்பரிசை பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியில் விஷேட அதிதியாக வன்னி மாவட்ட பாராளுமன்ர உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களும் பிரதம அதிதிகளாக முன்னால் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான J.M.தாரிக், A.அலாவுதீன்,பெளஸான், கல்பிட்டி பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் சலாஹூதீன்(சருபுதீன் ஹாஜி),மேலும் பலரும் கலந்து கொண்டனர்.

-Rizvi Hussain-









Post a Comment

0 Comments