Subscribe Us

header ads

உலகின் அதிவேக மனிதர் இவ்வருடத்துடன் ஓய்வு


உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவது உறுதியாகியுள்ளது. தனது சொந்த, உலக சாதனையை மீண்டும் முறியடிப்பதற்கான முயற்சிகளில் உசைன் போல்ட் களம் கண்டுள்ளார்.
எனினும் அவரது ரசிகர்களில் சிலர் போல்ட் ஓய்வு பெற வேண்டும் எனவும் மேலும் சிலர் போல்ட் ஓய்வு பெறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளின் பின்னர் போல்ட் ஓய்வு பெறுவார் எனத் தெரிவிக்கப்ட்டிருந்தது. எனினும் தற்போது செக்குடியரசில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளின் பின்னர் உசைன் போல்டின் ஓய்வு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது உணர்ச்சிவசப்பட்ட போல்ட் இந்த வருட இறுதிப் போட்டிகள் தொடர்பில் பதிலளித்துள்ளார்.
உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களையும் 13 உலக சம்பியன்ஷிப் பதக்கங்களையும் வெற்றி கொண்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Post a Comment

0 Comments