ஐக்கிய அரபு இராச்சியமும் பஹ்ரைனும் சிவப்பு அலர்ட் மெஸேஜ்கள் அனுப்பி அலறவைத்து இருக்கின்றன.இலங்கையில் இருந்து கட்டார் செல்லும் கட்டார் ஏர்வேஸ் விமானங்களுக்கு தங்கள் வான் பரப்புக்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.வழக்கமாய் கட்டுநாயக்கவில் இருந்து கட்டார் செல்லும் விமானங்கள் சென்னை, மும்பை, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம்,பஹ்ரைன் என்ற பயணபாதையையே பயன்படுத்தும்.எந்தவித பிக்கல் பிடுங்கலும் இல்லாத இந்த வான் பாதை தெஹிவலையில் இருந்து காலிவீதியில் வெள்ளவத்தை செல்வது போல அத்தனை துல்லியம்..
தற்போது ஓமான் எல்லை வந்ததும் அப்படியே ஈரானுக்குள் நுழைந்து ஒரு பெரும் சுற்று சுற்றி சீரழிந்து டோஹா விமானநிலையத்தை அடைய வேண்டி இருக்கிறது..இதனால் வழக்கமாய் டோஹா செல்வதற்கு எடுக்கும் நேரத்தை விட ஒரு மணித்தியாலம் அதிகமாய் கட்டார் ஏர்வேஸ் விமானங்களுக்குத் தேவைப்படுகிறது..ஒரு விமானம் ஒரு மணித்தியாலம் வீணே வான் பரப்பில் சுற்றும் போது ஏற்படும் எரிபொருள் விரயம் பொருளாதார இழப்பு எல்லாம் மிக அதிகம்..கட்டார் ஏர்வேஸுக்கு சொந்தமான 192 விமானங்கள் 151 நாடுகளுக்கு தினமும் பறக்கின்றன.சுவர்க்கத்தின் காவலர்களான சவூதி, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம்,ஏமன் எல்லாம் சவூதி அரசன் சல்மான் இன் அமுதவாக்குப்படி அதன் வான் எல்லைகளை மூடி விட்டதால் கட்டார் ஏர்வேஸ் விமானங்கள் சந்திக்கப் போகும் பொருளாதார இழப்புகள் மட்டும் பல்லாயிரம் கோடிகள்......
விமான போக்குவரத்து சேவையிலேயே இத்தனை இழப்புக்களை இந்த தேசம் சந்திக்கும் போது ஏனைய இறக்குமதி தடைகள், கதவடைப்புக்கள், கிழித்து எறியப்பட்டு இருக்கும் இராஜதந்திர உறவுகள் போன்றவற்றால் மிக மோசமான சீர்கேடுகளை எதிர் கொள்ளப் போகிறது..கட்டார் என்பது எமது இளைஞர்கள் பலருக்கு கனவு தேசம்..பலரின் ஏழ்மைக் கோலங்களைக் கலைத்து சமூகத்தில் கெத்தாய் தலைநிமிர்ந்து நடக்கவைத்த அட்சய பாத்திரம் அது.இதனாலேயே எமது நாட்டின் உள்ளூர் பிரச்னை ஒன்றின் முக்கியத்துவத்தை விட கூடுதலான கவனயீர்ப்பை இந்த கட்டார் விவகாரம் சட்டென்று பெற்றுவிட்டது.'கட்டார் ,ஈரானை ஆதரித்து பேசியதாம், ஹமாஸுக்கு ஆதரவளித்ததாம். பயங்கரவாத இயக்கங்களைப் போசிக்கிறதாம்'..எனவே இவளுக்கு இதுவும் வேணும்.இன்னமும் வேணுமாம் என்று இணையத்தளங்களில் கட்டுரையாளர்கள் சிலர் திருவாய் மலருகின்றனர்..அப்படிப்பார்த்தால் சவூதி மட்டும் உத்தமனா என்ன ? சவூதி என்பது அமெரிக்காவின் நிரந்தர விபச்சாரி..அமெரிக்கா என்பது சவூதியின் ரெகுலர் கஸ்டமர்...
சவூதி மன்னன் சல்மானின் நாட்டுக்கு ட்ரம்ப் வந்த போது 110 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்தானது..சல்மானும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து ' ட்ரம்ப் சரணங் கச்சாமி " என்று உச்சரித்துக் கொண்டு இருந்தான்..அன்று முதல் ஆரம்பானது சனி..கட்டாருடன் நட்புறவைப் பேணவும் வேண்டும்..கட்டாருக்கு குட்ட வேண்டும்..என்ன வழி என்று யோசித்த அமெரிக்கா தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல வளைகுடாவின் தன் உயர் சாதி டாபர் மென் நாய் இனங்களான சவூதி ,எமிரேட்ஸ் ஆகியவற்றைத் தூண்டி மறைமுக பொருளாதாரத் தடை விழாவை ஆரம்பித்து வைத்துவிட்டு திரைக்குப் பின்னால் ஒளிந்துவிட்டது..எஜமானின் கட்டளையை ஏற்று தலையில் தீச்சட்டி சுமந்தபடி யாகத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றன இந்த காட்போட் முஸ்லிம் நாடுகள்..
இஸ்ரேல் உடன் யுத்தம் செய்து வெறும் ஆறே ஆறு நாட்களில் அனைத்தையும் இழந்து சரியாய் ஐம்பது வருடங்களைக் கடந்திருக்கும் நிலையில் இந்த அரபுகள் இனியும் திருந்தப் போவதில்லை என்பதற்கு இதற்கு மேலும் சான்று இல்லை..இப்படிப்பட்ட நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் பிரச்னைகளைப் பேசும் போது விநோதமாய் இருக்கிறது...
-Zafar Ahamed-


0 Comments